இந்தியா

“நமது கலாச்சாரம் அல்ல; புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும்” : உ.பி பா.ஜ.க அமைச்சர் திமிர் பேச்சு!

உத்தர பிரதேச மாநில பா.ஜ.க தலைவரும், அமைச்சருமான ரகுராஜ்சிங் இந்தியாவில் புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

“நமது கலாச்சாரம் அல்ல; புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும்” : உ.பி பா.ஜ.க அமைச்சர் திமிர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மக்களை கொச்சைப்படுத்தியும், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தைப் பேசுவதையுமே பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக பா.ஜ.கவின் எம்.பி., எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்களும், மூத்த நிர்வாகிகளும் இஸ்லாமியர்கள் குறித்து மோசமான வகையில் பேசி வருகின்றனர்.

அந்தவகையில், உத்தர பிரதேச மாநில பா.ஜ.க தலைவரும், அமைச்சருமான ரகுராஜ்சிங் இந்தியாவில் புர்காவுக்கு தடை விதிக்கவேண்டும் எனப் பேசியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெற்றது.

அந்தப் பேரணியில் கலந்துகொண்டு பேசிய ரகுராஜ்சிங், “இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா இந்தியக் கலாச்சாரம் அல்ல, அது அரபு நாட்டின் கலாச்சார வழக்கம். இலங்கையில் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு அந்நாட்டில் புர்கா அணிய தடைவிதித்துள்ளனர்.

“நமது கலாச்சாரம் அல்ல; புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும்” : உ.பி பா.ஜ.க அமைச்சர் திமிர் பேச்சு!

இந்தியாவில் சிஏஏ-விற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் டெல்லி ஷாஹீன் பாக்கில் ஏராளமானோர் புர்காவை தவறாக பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் ஊடுருவ புர்காவை பயன்படுத்துகின்றனர்.

எனவே, மத்திய மாநில அரசுகள் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன.

முன்னதாக டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தில் புர்காவை அணிந்துகொண்டு போராட்டத்தை சீர்குலைக்க முயன்ற பா.ஜ.க-வைச் சார்ந்த பெண் ஒருவரை போலிஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories