இந்தியா

“உதாரண மனிதர்களையும், வரலாற்றையும் மறந்துவிட்டார் மோடி” - ப.சிதம்பரம் காட்டம்!

காஷ்மீர் தலைவர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

“உதாரண மனிதர்களையும், வரலாற்றையும் மறந்துவிட்டார் மோடி” - ப.சிதம்பரம் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை பா.ஜ.க அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், பரூக் அப்துல்லாவைத் தொடர்ந்து, முன்னாள் முதல் அமைச்சர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது, “உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோருக்கு எதிராக கொடூரமான பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது கண்டு அதிர்ந்தேன்.

“உதாரண மனிதர்களையும், வரலாற்றையும் மறந்துவிட்டார் மோடி” - ப.சிதம்பரம் காட்டம்!

ஜனநாயகத்தில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் அடைத்து வைத்திருப்பது மோசமான அருவருப்பான செயல். அநியாயமான சட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, அமைதியாக எதிர்ப்புத் தெரிவிப்பதைவிட மக்களால் வேறு என்ன செய்துவிட முடியும்?

போராட்டங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு இட்டுச் செல்லும் எனவும், நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதால், எம்.பிக்கள் அதற்குப் பணிந்து நடக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற உணர்ச்சிமிகு உதாரண மனிதர்களையும், வரலாற்றையும் அவர் மறந்துவிட்டார்.

அநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, சட்ட ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும். இதுதான் சத்தியாகிரகப் போராட்டம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories