இந்தியா

“ஆக்கப்பூர்வமான யோசனையில்லை; எல்லாம் வெற்று வார்த்தைகள் தான்” : பட்ஜெட் குறித்து பொங்கிய ராகுல்!

நிதியமைச்சரின் உரை நீண்ட நெடிய உரையாக இருந்தாலும் எல்லாம் வெற்று வார்த்தைகளாகதான் இருக்கின்றன என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சாடியுள்ளார்.

“ஆக்கப்பூர்வமான யோசனையில்லை; எல்லாம் வெற்று வார்த்தைகள் தான்” : பட்ஜெட் குறித்து பொங்கிய ராகுல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடுமையாக பொருளாதாரச் சரிவை இந்தியா சந்தித்துவரும் நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான (2020-2021) மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

தனியார்மயம், நிதி ஒதுக்கீடு குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிட்டு சுமார் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார். நிதியமைச்சரின் இந்த உரை முற்றிலும் கார்ப்பரேட் நலன்களுக்காக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, “நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது அதீத பிரச்னையாக உள்ளது. இதனை சீர்படுத்துவதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஆக்கபூர்வமான யோசனைகள் எதுவும் பட்ஜெட்டில் இருந்ததாகத் தெரியவில்லை.

அரசின் மனப்பாங்கை விவரிக்கும் பட்ஜெட்டாகதான் அதில் உள்ள அம்சங்கள் உள்ளன. எல்லாமே வெறும் வெற்றுப் பேச்சுதான். மத்திய நிதியமைச்சர் ஆற்றிய உரை பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட, நெடிய உரையாக அமைந்திருந்தாலும் எல்லாம் வெற்று வார்த்தைகளாகதான் இருந்தன” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், பொருளாதார ஆய்வாளர்கள் என அனைவருமே பட்ஜெட் குறித்து தங்களின் எதிர்க்கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories