இந்தியா

ஏர் இந்தியாவை முழுவதுமாக தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு!

ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது.

ஏர் இந்தியாவை முழுவதுமாக தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார் மோடி. அந்த வரிசையில் கடன் சுமையை காரணம் காட்டி ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்தது.

கடந்த 2018ம் ஆண்டு ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

ஏர் இந்தியாவை முழுவதுமாக தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு!

இந்நிலையில், ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளும் விற்பனை செய்யப்படும் எனவும் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், தகுதியான நிறுவனங்கள் பட்டியல் மார்ச் 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஏர் இந்தியாவின் கிளை நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளும், ஏர் இந்தியா சிங்கப்பூர் ஏர்போர்ட் டெர்மினல் சர்விசஸ் நிறுவனத்தின் 50 சதவீதப் பங்குகளும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவை முழுவதுமாக தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு!

ஏர் இந்தியா நிறுவனத்தை விலைக்கு வாங்குபவர்களிடம் அதன் முழு உரிமையும் ஒப்படைக்கப்படும். ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குபவர்கள் அதன் கடனையும் ஏற்க முன்வர வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவை விற்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு சுப்ரமணிய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories