இந்தியா

"என் பின்னால் வருவதை விட்டுவிட்டு வேறு வேலையில் கவனம் செலுத்துங்கள்” - உள்துறை அமைச்சகத்தை சாடிய இல்திஜா!

பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தன்னை கண்காணிப்பது, தொல்லையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி.

"என் பின்னால் வருவதை விட்டுவிட்டு வேறு வேலையில் கவனம் செலுத்துங்கள்” - உள்துறை அமைச்சகத்தை சாடிய இல்திஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பது தொல்லையாக இருப்பதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வர்ந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களை தடுப்புக் காவலில் வைத்தது பா.ஜ.க அரசு.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் மகளான இல்திஜா முப்தியும் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இல்திஜா முப்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

"என் பின்னால் வருவதை விட்டுவிட்டு வேறு வேலையில் கவனம் செலுத்துங்கள்” - உள்துறை அமைச்சகத்தை சாடிய இல்திஜா!

அதில், “சிறப்பு பாதுகாப்புப் படையினரால் நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். எஸ்.எஸ்.ஜி படையினர் மட்டுமின்றி ஐ.பி உளவுத் துறை, சிஐடி போலிஸார் ஆகியோர் என்னை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பாதுகாப்பு என்ற பெயரில் எனது சுதந்திர உரிமை பறிக்கப்படக் கூடாது. நாட்டில் பல தீவிரமான பிரச்னைகள் நிலவி வருகின்றன. அதில் மத்திய உள்துறை அமைச்சகம் கவனம் செலுத்தவேண்டும். என்னைப் போன்றவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விவகாரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories