இந்தியா

சல்லிசல்லியாக நொறுங்கிய நீர்த்தேக்கத் தொட்டி... கட்டி முடித்த 4 ஆண்டுகளில் சோகம்! - வைரலாகும் வீடியோ

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஒன்று கட்டிமுடிக்கப்பட்ட 4 ஆண்டுகளிலேயே இடிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சல்லிசல்லியாக நொறுங்கிய நீர்த்தேக்கத் தொட்டி... கட்டி முடித்த 4 ஆண்டுகளில் சோகம்! - வைரலாகும் வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஒன்று கட்டிமுடிக்கப்பட்ட 4 ஆண்டுகளிலேயே இடிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் பங்குரா சரீங்கா பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் 165 கோடி ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியில் 700 கியூபிக் மீட்டர் அளவுக்கு நீரைச் சேமித்து வைக்கமுடியும்.

சரீங்கா சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக 2012ல் கட்டத் தொடங்கிய இந்தத் நீர்த்தேக்கத் தொட்டியின் பணிகள் 2015ல் முடிவடைந்தன.

சல்லிசல்லியாக நொறுங்கிய நீர்த்தேக்கத் தொட்டி... கட்டி முடித்த 4 ஆண்டுகளில் சோகம்! - வைரலாகும் வீடியோ

கடந்த 4 வருடங்களாக இந்த நீர்தேக்கத் தொட்டியின் மூலம் 20 கிராமங்களும் பயனடைந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நீர்த்தேக்க தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விரிசல் விரிவடைந்து வந்ததால் நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று வலுவிழந்த நீர்த்தேக்கத் தொட்டி பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பிரமாண்டமான நீர்த்தேக்கத் தொட்டி சரிந்து விழுந்துள்ளது அப்பகுதி கிராமத்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து தரைமட்டமான காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories