இந்தியா

“திணறிவரும் இந்திய பொருளாதாரத்தால் மதிப்பீட்டை 4.8% ஆக குறைத்த ஐ.எம்.எப்” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8 சதவீதம் தான் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

“திணறிவரும் இந்திய பொருளாதாரத்தால் மதிப்பீட்டை 4.8% ஆக குறைத்த ஐ.எம்.எப்” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய பொருளாதாரம் கடும் தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நசிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.

மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜி.டி.பி சரிவைச் சந்தித்துள்ளது.

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடி வாங்கியுள்ளது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் “2018-19 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 6.1 சதவீதமாக இருக்கும்” என தெரிவித்திருந்தது.

“திணறிவரும் இந்திய பொருளாதாரத்தால் மதிப்பீட்டை 4.8% ஆக குறைத்த ஐ.எம்.எப்” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை!

இதனையடுத்து ஐ.எம்.எப் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது முந்தைய கணிப்பில் இருந்த 6.1 சதவீதத்தை 4.8 சதவிகிதமாக குறைத்துள்ளது. இரண்டு மாதங்களில் 1.3 சதவிகிதம் குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு இந்த அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பில் ஜி.டி.பி 7.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories