இந்தியா

“ஆபாச படங்கள் பார்க்கவே காஷ்மீரில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்” - நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு!

காஷ்மீரில் இணைய துண்டிப்பு தொடர்பாக நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ஆபாச படங்கள் பார்க்கவே காஷ்மீரில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்” - நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இணையம், தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளையும் பா.ஜ.க அரசு முடக்கி வைத்துள்ளது.

காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டது தொடர்பாக 40க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதை விசாரித்த நீதிபதிகள், தொலைதொடர்பு சேவை முடக்கத்தை திரும்பப்பெறுவது பற்றி ஒரு வாரத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து காஷ்மீரில் நேற்று செல்போன் வசதி மீண்டும் வழங்கப்பட்டது. இணைய வசதியை தவிர குரல் அழைப்புகள், எஸ்.எம்.எஸ் வசதிகள் மீண்டும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், காஷ்மீரில் இணைய துண்டிப்பு தொடர்பாக நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அவர், காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் என்ன மாதிரியான தாக்கம் ஏற்பட்டுவிட்டது? எந்த மாற்றமும் நிகழவில்லை. ஏனெனில் ஜம்மு காஷ்மீரில் இணைய சேவை இருந்தால் ஆபாச படங்களைப் பார்ப்பதைத் தவிர, வேறு எதையும் செய்யமாட்டார்கள்.

அரசியல்வாதிகள் ஏன் காஷ்மீருக்கு செல்லவேண்டும் என விரும்புகின்றனர்? அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் டெல்லி வீதிகளில் என்ன நடக்கிறதோ அதேபோல் காஷ்மீரிலும் நடத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர். போராட்டத்தை தூண்ட சமூக வலைதளங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்” எனக் கூறினார்.

நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் சரஸ்வத்தின் பேச்சுக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது பேச்சுக்கு வி.கே.சரஸ்வத் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories