இந்தியா

இந்தப் படத்தைத் தான் பா.ஜ.கவினர் எதிர்த்தார்கள்.. புதிய திட்டமே இயற்றிய உத்தரகாண்ட் அரசு!

நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘சப்பாக்’ படத்தின் காரணமாக உத்தரகாண்ட் அரசு தனது மாநிலத்தில் ஒரு புது சட்டத்தையே அமல்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தைத் தான் பா.ஜ.கவினர் எதிர்த்தார்கள்.. புதிய திட்டமே இயற்றிய உத்தரகாண்ட் அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகை தீபிகா படுகோன் நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகி வெளியான திரைப்படம் ‘சப்பாக்’. இந்தப் படம் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளது.

ஆசிட் வீச்சு பாதிப்புக்குள்ளான ஒரு பெண்ணின் உண்மைக் கதையைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தத் திரைப்படக் கருத்தால் ஈர்க்கப்பட்டு உத்தரகாண்ட் பா.ஜ.க அரசு தனது மாநிலத்தில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பென்சன் திட்டம் என்ற ஒரு புது திட்டத்தையே அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் 5,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரையில் பென்சன் வழங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் படத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளதாக படக்குழு மகிழ்ச்சி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories