இந்தியா

சமூக நீதிக்காக போராடுவோருக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் : சோனியா காந்தி பேச்சு!

சமத்துவம், சமூகநீதிக்காக போராடுபவர்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றென்றும் துணைநிற்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

சமூக நீதிக்காக போராடுவோருக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் : சோனியா காந்தி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத ரீதியாக மக்களை பிரிக்கும் முயற்சியாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் போராட்டம் தொடரும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, “பொருளாதார மந்தநிலை, குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு போன்ற மனதிற்கு கவலை அளிக்கும் நிகழ்வுகளோடு இந்த புத்தாண்டு பிறந்திருக்கிறது எனக் கூறி மத்திய பா.ஜ.க அரசின் அவலங்களை பட்டியலிட்டார்.

இதுதவிர, குடியுரிமை திருத்த சட்டத்தை எதித்து நாடு தழுவிய அளவில் வரலாறு காணாத போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பல்லாயிரக் கணக்காண மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையின் அத்துமீறல்களை மீறி போராடி வரும் மாணவர் சமூகத்திற்கு தலைவணங்குவதாகவும் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

சமத்துவம், சமூகநீதி உள்ளிட்டவற்றை பாதுகாக்க போராடும் மக்களுக்கு, காங்கிரஸ் கட்சி என்றென்றும் துணைநிற்கும் என்றும் அமெரிக்கா, ஈரான் இடையேயான மோதல் விவகாரத்தில், இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவு எடுக்க காங்கிரஸ் காரியக்கமிட்டி வலியுறுத்துவதாகவும் சோனியாகாந்தி குறிப்பிட்டார்.

முன்னதாக, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் குடிமக்களுக்கு எதிராக உள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு சட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதை நிறுத்தவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories