இந்தியா

தள்ளாடும் இந்தியப் பொருளாதாரம்: ரூ.2,410 கோடி லாபம் சம்பாதித்த பாஜக - ஓராண்டில் 134% சொத்துகள் அதிகரிப்பு

இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் வேலையில் கடந்த 2018-19ம் நிதியாண்டில் பாஜ.வின் மொத்த வருமானம் ரூ.2,410 கோடியாக உயர்ந்துள்ளது.

தள்ளாடும் இந்தியப் பொருளாதாரம்: ரூ.2,410 கோடி லாபம் சம்பாதித்த பாஜக - ஓராண்டில் 134% சொத்துகள் அதிகரிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் பா.ஜ.க தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. பா.ஜ.க அரசு கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது. அதற்குப் பிரதிபலனாக பாரதிய ஜனதா கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவிலான நிதியுதவி வழங்குவதாகப் புகார் எழுந்தது.

இதனை பா.ஜ.க-வினர் மறுத்துவந்த நிலையில் தற்போது, பா.ஜ.க-வின் மொத்த வருமானம் குறித்தும், தேர்தல் வரவு-செலவு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த கடந்த 2018-19ம் நிதியாண்டில் பா.ஜ.க-வின் மொத்த வருமானம் 2,410 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 134 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த வரவு-செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி சென்ற நிதியாண்டில் பா.ஜ.க-வின் மொத்த வருமானம் 2,410 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

தள்ளாடும் இந்தியப் பொருளாதாரம்: ரூ.2,410 கோடி லாபம் சம்பாதித்த பாஜக - ஓராண்டில் 134% சொத்துகள் அதிகரிப்பு

அதற்கும் முந்தைய ஆண்டில் பா.ஜ.க-வின் வருமானம் சுமார் 1,027 கோடி ரூபாயாக இருந்ததுள்ளது. ஆனால் தற்போது, பா.ஜ.க-வின் மொத்த வருமானம் 134 சதவீதம் உயர்ந்து 2,410 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பா.ஜ.க-வுக்கு பெரும்பாலும் கார்ப்ப்ரேட் மற்றும் தன்னார்வ பங்களிப்புகள் அடிப்படையில், அஜிவான் சஹயோக் நிதியில் இருந்து வந்துள்ளன. மேலும், பா.ஜ.க நடத்திய நிகழ்ச்சியின் போது அதிகளவில் நிதி குவிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

banner

Related Stories

Related Stories