இந்தியா

போராட்டங்களுக்கு மத்தியில் நாடு முழுவதும் அமலுக்கு வந்த #CAA : அரசிதழில் மத்திய அரசு அறிவிப்பு!

மோடி அரசால் கொண்டுவரபட்ட குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி10 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டங்களுக்கு மத்தியில் நாடு முழுவதும் அமலுக்கு வந்த #CAA :   அரசிதழில் மத்திய அரசு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த மாதம் 11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் முஸ்லிம்கள் மக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி இந்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

நாட்டில் முதல் முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியதோடு,. இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படையை சிதைப்பதாகும் என்றும் கூறி வருகின்றனர்.

மாணவர்கள் அரசியல் கட்சியினர் மக்கள் என குடியுரிமையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனாலும் எக்காரணம் கொண்டும் எதிர்ப்புகளுக்கு அரசு பணியாது. இந்த சட்டத்தை அமல்படுத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்று சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.

போராட்டங்களுக்கு மத்தியில் நாடு முழுவதும் அமலுக்கு வந்த #CAA :   அரசிதழில் மத்திய அரசு அறிவிப்பு!

இதன்தொடர்ச்சியாக நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பாணையை வெளியிட்டது. இதன்படி, குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான விதிமுறைகள் வகுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

banner

Related Stories

Related Stories