இந்தியா

“ஐயா, தமிழ் இயக்குநர்களே...” - ‘தர்பார்’ படத்தை கலாய்க்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி!

நடிகர் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படத்தில் லாஜிக் இல்லை என ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

“ஐயா, தமிழ் இயக்குநர்களே...” - ‘தர்பார்’ படத்தை கலாய்க்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகர் ரஜினிகாந்தின் 167வது படமான ‘தர்பார்’ நேற்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

பல வருடங்களுக்குப் பின் இப்படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைப் போலவே விமர்சனமும் அதிகமாக எழுந்துள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களில் சமூக அக்கறையுடன் கூடிய வசனங்கள் இடம்பெற்றாலும் சர்ச்சைக்குரிய வசனங்களுக்கும் பஞ்சமிருக்கது. அப்படி, முன்னதாக அவர் இயக்கிய ‘சர்கார்’ படம் சர்ச்சைகளைக் கிளப்பியது.

“ஐயா, தமிழ் இயக்குநர்களே...” - ‘தர்பார்’ படத்தை கலாய்க்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி!

குறிப்பாக, குடிமக்களுக்கு அரசு வழங்கும் இலவச உதவிகளை தீயிட்டுக் கொழுத்துவது போன்ற அரைவேக்காட்டுத்தனமான காட்சிகள் கடும் கண்டனத்திற்கு உள்ளாகின. முருகதாஸின் கதை குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இதுபோன்று படத்தில் இடம்பெறும் வசனங்களும், காட்சிகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தின.

இந்நிலையில், ‘தர்பார்’ படத்தில் மும்பை காவல் ஆணையராக ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்தில் எந்த லாஜிக்கும் இல்லை எனப் பலரும் விமர்சித்தனர். இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

அதில், “ஐயா, தமிழ் இயக்குனர்களா... இனிமே இந்த IAS,IPS பின்புலம் வச்சி எந்தப் படமும் எடுக்காதீங்கய்யா. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது” எனத் தெரிவித்துள்ளார். அவரின் கருத்து விவாதத்திற்குள்ளாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories