இந்தியா

ஜே.என்.யூ மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் எதிரொலி - பல்கலைக்கழகத் தேர்தலில் ஏ.பி.வி.பி படுதோல்வி!

சமஸ்கிருத பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் ஏ.பி.வி.பி அணி படுதோல்வி அடைந்துள்ளது.

ஜே.என்.யூ மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் எதிரொலி - பல்கலைக்கழகத் தேர்தலில் ஏ.பி.வி.பி படுதோல்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஜன.,5ம் தேதி ஏ.பி.வி.பி கும்பல் மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, ஏ.பி.வி.பி அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தற்போது, வாரணாசியில் உள்ள சம்பூர்ணனந்தா சமஸ்கிருத விஷ்வவைத்யாலயா என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஏ.பி.வி.பி அணியை தோற்கடித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான யூனியன் தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர் என அனைத்து விதமான பொறுப்புகளுக்கும் நடைபெற்ற இந்தத் தேர்தலில் ஏ.பி.வி.பி, அணி கடும் தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI)
இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI)

ஜே.என்.யூ மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இந்த தேர்தலில் ஏ.பி.வி.பி அணி தோல்வியுற்றது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் மீது வன்முறையை நிகழ்த்தும் இது போன்ற இந்துத்வா கும்பலுக்கு ஏ.பி.வி.பி-யினரின் தோல்வி ஒரு சிறந்த பதிலடியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories