10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் 2021ம் ஆண்டின் இறுதியில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான இந்திய வீரர்களை தேர்வு செய்துவிட்டதாகவும் அவர்களுக்கு விண்வெளியில் பயணிப்பதற்கான பயிற்சிகள் ரஷ்யாவில் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்வெளி பயணத்துக்கு தேர்வாகியுள்ள வீரர்களுக்கான இந்திய உணவுகள் கொண்ட பட்டியல் தயாராகியுள்ளது.
அந்த பட்டியலை மைசூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.
அதில், இட்லி, பாசிப்பயறு அல்வா, வெஜ் புலாவ், வெஜ் ரோல், எக் ரோல், பால், புவியீர்ப்பு விசை இல்லாத நேரத்தில் பழச்சாறு, நீராகாரங்கள் போன்றவற்றை பருகுவதற்கான சிறப்பு பாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்வெளி வீரர்கள் உணவுகளை சூடு செய்து சாப்பிடுவதற்கு ஏதுவாக ஹீட்டர்களும் கொடுக்கப்படவுள்ளது. இந்த உணவுகள் எல்லாம் வீரர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு தயார் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.