இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபொல குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினர் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தையும் முறையாக நடத்தாமல் தொடர்ந்து மக்களிடையே அசிங்கப்பட்டு வருகின்றனர் பாஜகவினர். அந்த வகையில் CAA என்ற ஹேஷ்டேக்குக்கு பதில் CCA என பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர்.
நாட்டின் மிகப்பெரிய தேசிய கட்சி பொது வெளியில் பெருமையாக பிரகடனப்படுத்திக்கொண்டு அசிங்கப்பட்டுக் கொண்டு வருகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக தன்னுடைய மிஸ்டுகால் உத்தியை கையில் எடுத்து மிகவும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளது பாஜக. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக சமூக வலைதளங்களில் பெண்களின் எண் என குறிப்பிட்டு மிஸ்டு கால் கொடுக்கச் செய்து வருகிறது பாஜக.
இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் கணக்கின் ஃபோன் நம்பர் எனக் குறிப்பிட்டு இதற்கு கால் செய்து படம் பார்த்துக் கொள்ளுங்கள் என பாஜக ஆதரவாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெட்ஃபிளிக்ஸ்-க்கு இது போன்று எந்த எண்ணும் இல்லை. அப்படி கட்டணமில்லாமல் படம் பார்க்க வேண்டும் என்றால் இன்னொருவரின் நெட்ஃபிளிக்ஸ் அக்கவுண்டை பயன்படுத்தி பார்த்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளது.
இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலானதோடு வழக்கம் போல் இளைஞர்களின் கலாய்க்கு ஆளாகியுள்ளனர் சங்கிகள்.