இந்தியா

2020-ன் முதல் நாளில் 67000 குழந்தைகள் பிறப்பு - உலகளவில் இந்தியா முதலிடம்!

2020ம் ஆண்டின் ஜனவரி 1ல் உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளின் விவரங்களை யுனிசெஃப் வெளியிட்டுள்ளது.

2020-ன் முதல் நாளில் 67000 குழந்தைகள் பிறப்பு - உலகளவில் இந்தியா முதலிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2020ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகள் குறித்த விவரங்களை ஐ.நாவின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2020ம் ஆண்டின் முதல் குழந்தை பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிஜி தீவிலும், கடைசிக் குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது. மேலும் 8 நாடுகளில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் புத்தாண்டு அன்று பிறந்துள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக இந்தியாவில் மட்டும் 67,385 குழந்தைகள் பிறந்துள்ளன என யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2020-ன் முதல் நாளில் 67000 குழந்தைகள் பிறப்பு - உலகளவில் இந்தியா முதலிடம்!

அதேபோல, சீனாவில் 46,299 , நைஜீரியாவில் 26,039 , பாகிஸ்தானில் 16,787 , இந்தோனேசியாவில் 13,020 , அமெரிக்காவில் 10,452 குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும், காங்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1ம் தேதி அன்று குழந்தை பிறப்பதை பலரும் அதிர்ஷ்டம் என நம்புகின்றனர். இதனால் பெரும்பாலானோர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுக்கின்றனர் எனவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories