இந்தியா

எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து CAA-வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது கேரள அரசு!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து CAA-வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது கேரள அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரள மாநில முதல்வர்களும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.

பின்னர், இந்த தீர்மானத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவை தெரிவித்தது. அதனையடுத்து இந்தத் தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கேரளாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லி சென்று குடியரசு தலைவரைச் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து CAA-வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது கேரள அரசு!

அதுமட்டுமின்றி, கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படாது என்றும், சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைப்பதற்காக தடுப்பு முகாம்கள் அமைக்கப்படாது என்றும் முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக தீர்மானத்தின் போது பேசிய அவர், “கேரளா மதச்சார்பின்மையை பன்னெடுங்காலமாக பாதுகாத்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து இருப்பது கேரளாவின் பாரம்பரியம். சட்டப்பேரவை இதனை உயிர்ப்புடன் வைத்திருப்பது அவசியம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories