குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, அவுரங்காபாத்தில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான பொதுமக்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்தப் பேரணியில் கலந்துகொண்ட வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய அவர், “குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி 40 சதவீதம் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள்.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை கட்டி வருகிறது. குறிப்பாக, நவி மும்பை பகுதியில் உள்ள தடுப்பு முகாமில் மட்டும் 1.5 லட்சம் பேரையும், கார்கரில் உள்ள தடுப்பு முகாமில் 5 லட்சம் பேரையும் அடைக்க முடியும்.
இந்த பிரச்சனைகளை மறைப்பதற்கு NRC அமல்படுத்தமாட்டோம் என்று மோடி அரசு கூறுகிறது. ஆனால், மறுபுறம் இதுபோன்ற முகாம்களை திறந்துகொண்டு இருக்கிறது. முகாம்களுக்கு இப்போது எங்கிருந்து தேவை வந்தது? என்று பிரகாஷ் அம்பேத்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.