இந்தியா

விதிகளைப் பின்பற்றாமல் விமான ஊழியர்களிடம் சண்டை - பா.ஜ.க எம்.பி மீது சக பயணிகள் ஆத்திரம்!

விதிமுறைகளை கடைபிடிக்காமல் விமான ஊழியர்களிடம் பிரக்யா சிங் தாக்கூர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விதிகளைப் பின்பற்றாமல் விமான ஊழியர்களிடம் சண்டை - பா.ஜ.க எம்.பி மீது சக பயணிகள் ஆத்திரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மத ரீதியான வன்மக் கருத்துகளையும், சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பேசுவதில் பிரபலமானவர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய இவர், பா.ஜ.கவில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார்.

பா.ஜ.கவின் மக்களவை உறுப்பினராக உள்ள பிரக்யா சிங், சமீபத்தில் கூட நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை ‘தேசபக்தர்’ என்று பேசி சொந்தக் கட்சியினர் மத்தியிலேயே வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டார்.

இதனையடுத்து தற்போது விமானத்தில் பயணிகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். பா.ஜ.க எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து போபாலுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் முன்வரிசையில் அமர்வதற்கு புக் செய்துள்ளார்.

இதையடுத்து, விமானத்திற்கு சக்கர நாற்காலியில் வந்துள்ளார் பிரக்யா தாக்கூர். சக்கர நாற்காலியில் வந்ததால் பாதுகாப்பு கருதி முன் இருக்கையில் அனுமதிக்கமுடியாது எனவும் பின் இருக்கையில் அமர்ந்துகொள்ளும்படியும் விமான ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் பிரக்யா சிங் தாக்கூர் அதற்கு சம்மதிக்காமல் ஊழியர்களிடம் வாக்குவதாத்தில் ஈடுபட்டார். இதனால் சக பயணிகள் அதிருப்தி அடைந்தனர். வாக்குவாதத்தால் விமானம் புறப்படுவற்கு தாமதமானதால் அவரை அடுத்த விமானத்தில் வரச் சொல்லுங்கள் என பயணிகள் ஊழியர்களை வலியுறுத்தத் தொடங்கினர்.

அப்போது தான் பணிக்குச் செல்வதற்குத் தாமதமானதால் ஆத்திரமடைந்த சக பயணி பிரக்யாவை பார்த்து, “நீங்கள் மக்களின் பிரதிநிதியே தவிர மக்களைத் தொந்தரவு செய்வது உங்களது வேலையல்ல. சிரமமாக இருந்தால் தயவுசெய்து அடுத்த விமானத்தில் வாருங்கள்” எனக் கூறினார்.

அதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்துப் பேசிய பிரக்யா சிங், முதல் வகுப்பு வசதி இல்லாத இந்த விமானத்தில் வருகிறேன் என்றால் அதற்கு ஏதாவது காரணமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் எனப் பதிலளித்தார்.

உடனே, “நீங்கள் முதல் வகுப்பு கோருவது பிரச்னை அல்ல. இங்கே உங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டால், நீங்கள்தான் தார்மீக ரீதியில் அதற்குப் பொறுப்பேற்கவேண்டும். அதற்கான பண்பையும் வளர்த்துக் கொள்ளுங்கள்” என அறிவுறுத்தினார்.

மேலும், “ஒரு தலைவரைப் போல நடந்துகொள்ள முயற்சியுங்கள். உங்களால் விமானத்தில் இருக்கும் 50 பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதற்காக நீங்கள் வருத்தமடைய வேண்டும்” எனக் கூறினார். அதற்கு நான் பேசுவது சரியாகத்தான் இருக்கிறது என்று பிரக்யா சிங் தாக்கூர் பதிலளிக்க இந்த வாக்குவாதம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

விதிகளைப் பின்பற்றாமல் விமான ஊழியர்களிடம் சண்டை - பா.ஜ.க எம்.பி மீது சக பயணிகள் ஆத்திரம்!

பின்னர் விமான ஊழியர்கள் ஒதுக்கிய இருக்கையில் அமர்ந்து பிரக்யா பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் போபாலை அடைந்ததும் ஊழியர்கள் குறித்து விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் அவர் புகார் தெரிவித்தார்.

பின்னர் விசாரணை நடத்திய அதிகாரி பிரச்னை குறித்து கூறுகையில், ”டிசம்பர் 21ம் தேதி ஸ்பைஸ்ஜெட் டெல்லி - போபால் விமானத்தில் பயணம் செய்வதற்கு பிரக்யா சிங் இருக்கை எண் 1ஏ-வை முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால் சக்கர நாற்காலி கொண்டுவருவது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. சக்கர நாற்காலியில் வருவோருக்கு முதல் வரிசை இருக்கை ஒதுக்கப்படாது. ஏனெனில் முதல் வரிசை இருக்கைகள் அவசர கால சேவைக்காக அளிக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

உரிய வகையில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் தன்மேல் தவறுகளை வைத்துக்கொண்டு விமான ஊழியர்களிடம் பிரக்யா சிங் தாக்கூர் வாக்குவாதத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விமானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories