இந்தியா

#CAA | “போராட்டக்காரர்களை கண்டதும் சுட்டுத்தள்ளுங்கள்” - மத்திய இணையமைச்சர் சர்ச்சை பேச்சு (வீடியோ)

பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது

#CAA | “போராட்டக்காரர்களை கண்டதும் சுட்டுத்தள்ளுங்கள்” - மத்திய இணையமைச்சர் சர்ச்சை பேச்சு (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் என எதிர்க்கட்சிகளும், மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலமான அசாம், திரிபுராவில் தொடங்கி தற்போது தமிழகம், கேரளா என நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தாக்குதலிலும் டெல்லி போலிஸ் ஈடுபட்டது. இதில் மாணவர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, 13 லட்சம் ஊழியர்களை கொண்ட ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

எனவே போராட்டங்களில் ஈடுபடுவோர் ரயில்வே உள்ளிட்ட பொது சொத்துகளை சேதப்படுத்தினால் துப்பாக்கியால் சுட வேண்டும் என ரயில்வே துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இதனை அதிகாரிகள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுரேஷ் அங்காடியின் இந்த பேச்சு போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதமாக உள்ளது என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் சுரேஷ் அங்காடியின் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

banner

Related Stories

Related Stories