நாடு தற்போது வளர்ந்திருக்கும் வளர்ச்சியில் மக்கள் அனைவருமே பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளனர். இதில் சீனா போன்ற வளர்ச்சி அடைந்த நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் மக்கள் இன்னும் வேகமாக செயல்படுகின்றனர். கடும் போக்குவரத்து அவசரம் என சாலையில் எப்போதும் கூட்டமாக இருக்கும் சீனா விதிகளில் விபத்துகளும் அதிக நடக்கிறது.
இந்த விபத்துக்களை தடுக்க சீனா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தால் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் சீனாவில் சோங்கிங் (chongqing) நகரில் உள்ள சாலையோரத்தில் வைக்கப்பட்ட போக்குவரத்து சிசிடிவி-யில் பதிவாகிய ஒரு சிறுவனின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், உள்ள ஸீப்ரா க்ராஸிங்கில் பெண் ஒருவர் தன் மகனுடன் சாலையைக் கடக்க முயற்சிக்கிறார். அப்போது சாலை விதிகளை மதித்து வாகனத்தை நிறுத்தாமல், கார் ஒன்று சிக்னலை கடக்க முயன்றது. அப்போது ஸீப்ரா கிராஸிங்கில் நடந்து சென்ற பெண் மற்றும் அவரது மகன் மீது கார் மோதியது. இதில் மகனுடன் சேர்ந்து அந்த பெண்ணும் கீழே விழுகிறார்.
தன் அம்மாவை இந்த கார் இடித்துத் தள்ளிவிட்டது என ஆத்திரத்தில், கோபத்தின் உச்சிக்குச் சென்ற சிறுவன், அந்த காரை வேகமாக எட்டி உதைக்கிறார். விபத்து நடந்தையடுத்து காரிலிருந்து வெளியே வந்த ஓட்டுநரிடம் அந்த சிறுவன் சண்டை போடுகிறான்.
பின்னர் அம்மாவை பார்க்க ஓடிவந்து அழுது கொண்டே விசாரிக்கிறான். இந்த காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது. கார் ஓட்டி வந்த நபர் அந்த சிறுவனையும், அவனது அம்மாவையும் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தனது அம்மாவின் மீது அளவு கடந்த பாசத்தின் மிகுதியால், அவரை இடித்த காரை எந்தவித அச்சமின்றி தாக்கிய சிறுவனின் தாய் பாசம் அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.