கர்நாடகாவில் இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்தார்.
1. ஹன்சூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றி
2. சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அர்ஷத் ரிஷ்வான் வெற்றி
1. காக்வாட் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீமந்த் பாடில் வெற்றி
2. சிக்கபெல்லாபூர் பா.ஜ.க வேட்பாளர் சுதாகர் வெற்றி
3. கே.ஆர்.பேட்ட பா.ஜ.க வேட்பாளர் கே.சி.நாராயண கவுடா வெற்றி
4. எல்லப்பூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஷிவ்ராம் ஹெப்பர் வெற்றி
5. கோகாக் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் ஜார்கிஹோளி வெற்றி
6. ஹெரிகுருர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பி.சி.பாடில் வெற்றி
7. விஜயநகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஆனந்த்சிங் வெற்றி
8. ரானிபென்னூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அருண்குமார் வெற்றி
பா.ஜ.க - 10
காங்கிரஸ் - 2
ம.ஜ.த - 2
மற்றவை - 1
கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அதில், 6 இடங்களில் பா.ஜ.க-வும், 1 தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் முன்னிலையில் உள்ளது.
15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலத்தின் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்படுகின்றன. மேலும் 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நண்பகல் 12 மணிக்குள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை தக்கவைக்க முடியும் என்பதால், கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.