இந்தியா

"பா.ஜ.க ஆட்சியில் இருக்கும்வரை பொருளாதாரம் மீள வாய்ப்பில்லை” - சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி!

பா.ஜ.க தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளமுடியும் என எனக்குத் தோன்றவில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

"பா.ஜ.க ஆட்சியில் இருக்கும்வரை பொருளாதாரம் மீள வாய்ப்பில்லை” - சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ப.சிதம்பரம், “பா.ஜ.க ஆட்சியில், நாட்டில் சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. இப்போதும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 75 லட்சம் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இந்தியா, சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய வலதுசாரி பிற்போக்கு பாசிச ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் காட்டுகின்ற எச்சரிக்கை உணர்வை எப்போது இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் உணர்கிறார்களோ அப்போதுதான் உண்மையிலேயே இந்தியா சுதந்திர நாடாக மாறும். பா.ஜ.கவை தமிழக மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அந்த எதிர்ப்புணர்வு மற்ற மாநிலங்களுக்கும் பரவவேண்டும்.

என் மன உறுதியைக் குலைப்பதற்காக என்னை சிறையில் அடைத்தார்கள். ஆனால், என்னுடய மன உறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது. என்னுடைய உடல்நலத்தை குலைக்க வேண்டுமென நினைத்தார்கள். நீதிமன்றத்தின் தலையீட்டால் என்னுடைய உடல்நலத்தை மீட்டெடுத்துள்ளேன்.

இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தொடர்ந்து, இதைப் பற்றி நாட்டு மக்களுடன் பேசுவேன்.

"பா.ஜ.க ஆட்சியில் இருக்கும்வரை பொருளாதாரம் மீள வாய்ப்பில்லை” - சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி!

நான் நிதி அமைச்சராக இருந்தபோது ஓராண்டில் 3,100 கோடி ரூபாய் நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டது. நிர்பயா நிதியை பல மாநிலங்கள் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக தமிழகமும் அந்த நிதியைப் பயன்படுத்தவில்லை.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக, உத்தர பிரதேசம் பெண்களுகான கொலைக்களமாக மாறிவருகிறது. இதைத் தடுக்கவேண்டியது பெண்களும், அரசும் மட்டுமல்ல; ஒவ்வொரு ஆணும் தான்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் 2004 - 2010 வரை 8.5 சதவீத வளர்ச்சி இருந்தது. இடையே 9 சதவீத வளர்ச்சி. பா.ஜ.க சொல்லும் வளர்ச்சி எட்டில் தொடங்கி நாலரையில் முடிந்திருக்கிறது. இவர்கள் 4.5 என்பது கூட பொய்யான புள்ளிவிபரம் தான். பா.ஜ.க தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளமுடியும் என எனக்குத் தோன்றவில்லை.” என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories