இந்தியா

”நாங்கள் வெங்காயம் சாப்பிடமாட்டோம்.. அதன் விலை பற்றி கவலையும் இல்லை” - நிர்மலா சீதாராமன் அலட்சிய பதில்

“நான் வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை” எனவே தனக்கு அதுபற்றி சம்பந்தமில்லை என்பதுபோல வெங்காய விலை உயர்வுக் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலட்சியமாக பேசியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அன்றாட சமையலுக்கு பெரிய அளவில் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை, தங்கத்தின் விலைக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வால் சமையலுக்கு வெங்காயத்தை மிகச் சிறிய அளவிலேயே பயன்படுத்தும் நிலைமைக்கு பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்களவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு கிலோ ரூ.67-க்கு வெங்காயத்தை இறக்குமதி செய்து, சந்தையில் கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

அப்போது பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயத்துடன் அதிகம் தொடர்பில்லாத குடும்பத்திலிந்து வந்திருக்கிறேன்” என்று கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சி உறுப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து அவையில் கூச்சலிட்டனர்.

பின்னர், வெங்காயத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அதனை சேமிக்கும் முறையில் சிக்கல் உள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சு நாட்டுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டின் அத்தியவசிய தேவைகுறித்து பொறுப்பின்றி பேசிய அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories