ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க ஆட்சியில் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்துவருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஒரு கிராமத்தில் ஃப்ளோரைடு (Flouride) கலந்த குடிநீரை கிராம மக்களுக்கு கிடைப்பதாகவும், அதனைக் குடிப்பதனால் இளம் வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு அப்பகுதி கிராம மக்கள் ஆளாவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு என்ற மாவட்டத்தில் உள்ள சுக்ரு என்ற கிராமத்தில் ஃப்ளோரைடு (Flouride) கலந்த அசுத்தமற்ற குடிநீரால் இளம் வயதிலேயே கிராம மக்கள் உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக 50 வயதிற்குள்ளாகவே பல்வேறு நோய்களால் தங்கள் வாழ்வை இழப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் தான் ஃப்ளோரைடு கலந்த குடிநீரால் சுக்ரு கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்தப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வின்படி நீண்ட காலமாக சுக்ரு கிராம மக்கள், ஃப்ளோரைடு கலந்த குடிநீரை பருகியதால் பற்கள் மற்றும் எலும்புகள் பலவீனமாகி உடலில் ஊனத்தைச் சந்திப்பது தெரியவந்துள்ளது.