மகாராஷ்டிர மாநிலத்தில் சூழ்ச்சி செய்து பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றதை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இரண்டு நாள் விசாரணைக்கு பின்னர், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று காலை சரியாக 10.30 மணியளவில் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியது என்.வி ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு.
அதில், மகாராஷ்டிராவில் இடைக்கால சபநாயகர் மூலம் நாளை மாலை 5 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ரகசிய முறையில் இல்லாமல் வாக்கெடுப்பு வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிட்டது.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்யவேண்டும் என்றும், வாக்குச்சீட்டு முறையிலேயே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.