இந்தியா

“முதலில் பொருளாதாரத்தை உயர்த்துங்கள்; பிறகு வங்கிகளை உலகத் தரத்துக்கு உயர்த்தலாம்”- கனிமொழி எம்.பி சாடல்!

மகாராஷ்டிராவில் குறுக்கு வழியில் ஆட்சி அமைத்து ஜனநாயகத்திற்கு பா.ஜ.க துரோகம் செய்துவிட்டதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

“முதலில் பொருளாதாரத்தை உயர்த்துங்கள்; பிறகு வங்கிகளை உலகத் தரத்துக்கு உயர்த்தலாம்”- கனிமொழி எம்.பி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க எம்.பி கனிமொழி, இந்திய வங்கிகளின் தரத்தை உயர்த்துவதற்கு முன்பு இந்திய பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மத்திய அரசு இந்திய தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம். எந்த கட்சி வெற்றி பெற்றாலும், நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என சர்வாதிகார போக்கில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது என கனிமொழி கூறினார்.

மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முதுநிலை மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்துவிட்டு, பொதுப்பிரிவினருக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு அறிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க சார்பில் நிச்சயம் குரல் எழுப்புவோம் என உறுதியளித்தார்.

banner

Related Stories

Related Stories