இந்தியா

தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் உட்பட 5 பொதுத்துறை நிறுவனங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

நாட்டின் 2வது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் உட்பட 5 பொதுத்துறை நிறுவனங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு பேசிய, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பாரத் பெட்ரோலியத்தில் 53.29 சதவிகித பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் குறிப்பிட்ட நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறினார்."

"அதில், இந்திய கப்பல் கார்ப்பரேஷனின் 63.75% பங்குகளும், அதன் நிர்வாகமும் தனியாருக்கு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதெபோல், இந்திய கண்டெய்னர் கார்ப்பரேஷனின்30.8% பங்குகளும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளன."

"மேலும், THDC எனும் நீர்மின் உற்பத்தி நிறுவனத்தின் 74.23% பங்குகளும், வடகிழக்கு மின் உற்பத்தி கார்ப்பரேஷ் நிறுவனமான நிப்கோவின் 100% பங்குகளும் தனியாருக்கு விற்கப்படுவதாக குறிப்பிட்டார்."

ஏற்கெனவே நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவரும் மோடி அரசு தற்போது பாரத் பெட்ரோலியமும் தனியார் மயமாக்கப்பட்டதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

பொருளாதார சரிவை சரிசெய்ய எந்த திட்டமும் வகுக்காமல் வழக்கம்போல் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் வேளையில் மட்டுமே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், இந்த பாரத் பெட்ரோலியமும் அம்பானியின் வசம் செல்லவிருப்பதாகவும் முன்பு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories