இந்தியா

தொடரும் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டம்... மூவர் குழு அமைத்த மத்திய அரசு - டெல்லியில் போலிஸார் குவிப்பு!

ஜே.என்.யூ மாணவர்கள் மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

தொடரும் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டம்... மூவர் குழு அமைத்த மத்திய அரசு - டெல்லியில் போலிஸார் குவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதி கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேஎன்யூ மாணவர்கள் பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜே.என்.யூ பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்து மாணவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் டெல்லியில் பரபரப்பு நிலவி வருகிறது. மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக பன்மடங்கு உயர்த்தப்பட்ட விடுதிக்கட்டணத்தை பாதியாக குறைப்பதாக ஜே.என்.யூ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

தொடரும் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டம்... மூவர் குழு அமைத்த மத்திய அரசு - டெல்லியில் போலிஸார் குவிப்பு!

இதனை ஏற்காமல் புதிய கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், 17வது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதால் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இதனை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவை காவல்துறை அமல்படுத்தியது. ஆனால், தடையை மீறி மாணவர்களின் பேரணி தொடர்ந்ததால் போலிஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரையில் சென்றது.

தொடரும் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டம்... மூவர் குழு அமைத்த மத்திய அரசு - டெல்லியில் போலிஸார் குவிப்பு!

மேலும், நாடாளுமன்றத்துக்கு அருகே தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள் மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, ஜே.என்.யூ மாணவர்களின் பிரச்னையை தீர்க்கும் வகையில் யூஜிசி முன்னாள் தலைவர் வி.எஸ்.சவுகான், ஏஐசிடீ அனில் சகஸ்ரபுதே, யூஜிசி செயலாளர் ரஜினிஸ் ஜெயின் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

தொடரும் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டம்... மூவர் குழு அமைத்த மத்திய அரசு - டெல்லியில் போலிஸார் குவிப்பு!

இதற்கிடையே, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலிஸார் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, #EmergencyinJNU #EmergencyJNU என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories