India

#LIVE “இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்” - 70 ஆண்டு கால அயோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வரவுள்ள நிலையில், அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

#LIVE “இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்” - 70 ஆண்டு கால அயோத்தி  வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
9 November 2019, 05:53 AM

அயோத்தி நிலம் ராமர் கோவில் கட்ட வழங்கப்படும். கோவில் கட்டும் பொறுப்பு அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும். - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு!

சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களுக்கே வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

9 November 2019, 05:42 AM

அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்!

#LIVE “இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்” - 70 ஆண்டு கால அயோத்தி  வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
9 November 2019, 05:40 AM

இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்!

#LIVE “இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்” - 70 ஆண்டு கால அயோத்தி  வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
9 November 2019, 05:39 AM

அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது!

#LIVE “இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்” - 70 ஆண்டு கால அயோத்தி  வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
9 November 2019, 05:39 AM

அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது சட்டத்திற்கு எதிரானது.

9 November 2019, 05:34 AM

1856 க்கு முன்பு மையப்பகுதியில் இந்துக்கள் பூசை செய்ததற்கான ஆதரங்கள் இல்லை. தொழுகை நடத்துவதற்கான உரிமை முஸ்லீம்கள் முழுமையாக இழக்கவில்லை.

9 November 2019, 05:33 AM

ஆவணங்களின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. - நீதிபதி ரஞ்சன் கோகாய்

9 November 2019, 05:29 AM

வெள்ளிக்கிழமை தோரும் முஸ்லிம்கள் தொழுகை நடத்திவருவது நிலத்துக்கான அவர்கள் உரிமையை உறுதி செய்கிறது.- நீதிபதி ரஞ்சன் கோகாய்

9 November 2019, 05:27 AM

நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

9 November 2019, 05:27 AM

பிரச்னைகுறிய இடத்தில் ராமர் பிறந்தார் என்ற இந்து நம்பிக்கையை மறுக்க முடியாது. சாட்சியங்கள் மூலம் இந்து கோயில் இருந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை.

9 November 2019, 05:27 AM

மசூதி கட்ட கோயில் இடிக்கப்பட்டதாக தொல்லியல் துறை நிரூபிக்க வில்லை - தலைமை நீதிபதி

9 November 2019, 05:27 AM

பாபர் மசூதி காலியான இடத்தில் கட்டபடவில்லை. மசூதிக்கு கீழ் இருந்தது இஸ்லாமிய கட்டிடம் இல்லை.

9 November 2019, 05:20 AM

ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது. அயோத்தியில் பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் ராமர் சிலை வைக்கப்பட்டது. - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

9 November 2019, 05:20 AM

ஒவ்வொரு மதத்தினரின் நம்பிக்கையையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டாகவேண்டும். ஒரு நடுநிலையை கடைபிடிக்க வேண்டும் - தலைமை நீதிபதி

9 November 2019, 05:15 AM

”மிர் பாக்கியால் பாபர் மசூதி கட்டப்பட்டது”

9 November 2019, 05:14 AM

ஒருதரப்பின் நம்பிக்கை மற்றவர்களின் நம்பிக்கையை பாதிக்க கூடாது.

9 November 2019, 05:08 AM

அயோத்திவழக்கு : ஷியா பிரிவு மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது

அயோத்தி வழக்கில் ஷியா வக்ஃபு வாரிய மேல் முறையீட்டு மனுக்களை 5 நீதிபதிகளும் ஒரு மனதாக தள்ளுபடி செய்தனர்.

9 November 2019, 05:08 AM

அயோத்தி வழக்கு: 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்க உள்ளனர்.

9 November 2019, 05:05 AM

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினர் நீதிபதிகள். 5000 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது.

9 November 2019, 05:05 AM

அயோத்தி வழக்கில் தீர்ப்பு

#LIVE “இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்” - 70 ஆண்டு கால அயோத்தி  வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியது.

9 November 2019, 04:48 AM

டெல்லியில் அமித்ஷா முக்கிய ஆலோசனை

#LIVE “இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்” - 70 ஆண்டு கால அயோத்தி  வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை..

9 November 2019, 04:41 AM

தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் வந்தார் நீதிபதி ரஞ்சன் கோகாய்!

அயோத்தி வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 10.30க்கு தீர்ப்பளிக்கிறது. இந்நிலையில் தீர்ப்பு அளிப்பதற்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றம் வந்துள்ளார்.

9 November 2019, 04:32 AM

அயோத்தி வழக்கு : இணையதள சேவை துண்டிப்பு

அயோத்தி தீர்ப்பு வெளியாவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மற்றும் முசாபர்பூரில் இணையதள சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் நாளை காலை 6 மணி வரை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9 November 2019, 04:12 AM

அயோத்தி வழக்கு : தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலிஸார் குவிப்பு!

#LIVE “இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்” - 70 ஆண்டு கால அயோத்தி  வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலிஸார், சென்னையில் 15 ஆயிரம் போலிஸார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

9 November 2019, 03:50 AM

அயோத்தி வழக்கு : உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 144 தடை உத்தரவும், பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

9 November 2019, 03:26 AM

அயோத்தி வழக்கு: சமூக வலைதளங்கள் கண்காணிப்பு

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு பதற்றத்தை உருவாக்கும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறதா என்பதை காவல்துறை அதிகாரிகள் கணிகாணித்து வருகின்றனர்.

9 November 2019, 03:22 AM

அயோத்தி வழக்கு - உச்சக்கட்ட பாதுகாப்பு!

#LIVE “இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்” - 70 ஆண்டு கால அயோத்தி  வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

9 November 2019, 03:11 AM

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு பாதுகாப்பு!

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வழங்கப்படும் பாதுகாப்பு இசட் பிளஸாக (Z+) அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேப்போல் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகியோருக்கு Z+ அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

9 November 2019, 03:03 AM

70 ஆண்டு கால வழக்கு - அயோத்தி - தீர்ப்பு!

1528: அயோத்தியாவில், பேரரசர் பாபர் ஒரு மசூதியை காட்டுகிறார். அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்துத்துவத்தினர் உரிமை கோரினர்.

1853-1949: இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து அந்த இடத்தின் உட்பகுதியை இஸ்லாமியர்களுக்கும், வெளிப்பகுதியை இந்துத்துவர்களுக்கும் ஒதுக்கியது பிரிட்டிஷ் அரசு.

1949: மசூதிக்குள்ள ராமர் சிலை வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட, மோதல் உருவானது. இதையடுத்து அது பிரச்னைக்குரிய இடம் என்று அறிவித்த நடுவண் அரசு அப்பகுதியை பூட்டி சீல் வைத்தது.

1950 : ராமர் சிலைக்கு பூசைகள் செய்ய அனுமதிக்கவேண்டும் என இரண்டு மனுக்கள் பைசாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 1959 ம் ஆண்டு நிர்மோஹி அகராவால் மூன்றாம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1961 : உத்திரபிரதேச சன்னி வக்ப் வாரியத்தின் சார்பில் இடத்தைத் தங்களிடம் அளிக்கக்கோரியும் அங்குள்ள சிலைகளை அகற்றவேண்டும் என்றும் கோரியும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

1986 : பிரச்னைக்குரிய இடத்தின் கதவுகளின் பூட்டை அகற்றவும், ராமர் சிலைக்கு பூசைகள் செய்யவும் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

1992 , டிசம்பர் 6 . : இந்துத்துவ கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடு முழுதும் மோதல்கள் ஏற்பட்டன. இதில் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

2001 : பாபர் மசூதி இடிப்பு மற்றும் வன்முறை குறித்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக கூறப்பட்ட அத்வானி, கல்யாண் சிங் உள்பட 13 பேரை விடுவித்தது.

#LIVE “இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும்” - 70 ஆண்டு கால அயோத்தி  வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

2002 : கோத்ரா ரயிலுக்கு வைக்கப்பட்ட தீயில் கருகி 58 பேர் உயிழந்தனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் 2000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

2010 : அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை ராமர் கோவிலுக்கும், ஒரு பங்கு இடத்தை வக்ப் வாரியத்துக்கு வழங்கி தீர்ப்பளித்தது.

2011 : அலஹாபாத் வழங்கிய இந்தத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

2017 : ராமர் கோவில் -பாபர் மசூதி பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியில் பேசி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியது.

2019 மார்ச் 8 : இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிடம் பேசி முடிக்க நடுவர் குழுவுக்கு எட்டு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்

2019 ஆகஸ்ட் 1 : நடுவர் குழு தந்தது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.

2019 ஆகஸ்ட் 2 : அயோத்தி விவகாரத்தில் நடுவர் குழு சரியான தீர்வை அடையாமல் தோல்வி அடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இத்தகைய நிலையில்தான் இன்று காலை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்கிறது.

banner

Related Stories

Related Stories