மைசூரைச் சேர்ந்தவர் தக்ஷின் மூர்த்தி கிருஷ்ண குமார். இவர் வடமாநிலங்களில் ஒருதனியார் வங்கியில் வேலை செய்து வந்துள்ளார். இவரது அப்பா கிருஷ்ண மூர்த்தி கடந்தாண்டு உயிரிழந்தையடுத்து தாய் சூடாரத்னா மற்றும் தனியாக வசித்துவந்துள்ளார். தனியாக வசித்து வந்த தாய்க்கு மாதம் மாதம் பண அனுப்பி பார்த்து வந்துள்ளார் தக்ஷின்.
71 வயதான தாயின் ஆசைகள் குறித்து தக்ஷின் எதுவும் கேட்டத்தில்லை. இந்நிலையில் கடந்த மாதம் தாய் சூடாரத்னாவை தக்ஷின் பார்க்கச் சென்றார். அப்போது தாய் தனக்கு வடமாநிலங்களில் உள்ள கோவில்களுக்குப் போகவேண்டும். ஆசையாக உள்ளது எனக் கேட்டுள்ளார். கடந்த 35 வருடங்களாக ஒருமுறைக்கூட அம்மாவின் ஆசை என்ன என்பதைக்கூட கேட்காமல் விட்டுவிட்டோமே என தக்ஷின் குற்ற உணர்ச்சிக்கு ஆளானர்.
பின்னர் தாயின் கடைசி காலத்தில், அவரின் ஆசையை நிறைவேற்ற நினைத்த தக்ஷின் தான் பார்த்து வந்த வங்கி வேலையை துரந்தார். அம்மாவை அழைத்துச் செல்வதற்கு தங்கள் வீட்டில் இருந்த பழமையான பஜாஜ் ஸ்கூட்டரை சரி செய்து அதில் பயணம் செய்ய முடிவு எடுத்தார். பயணத்திற்கு தேவையான உடை மற்றும் உணவு போன்றவற்றை எடுத்துக்கொண்டு மைசூரில் இருந்து கோயில்களுக்குப் புறப்பட்டனர்.
முதலில் தெற்கில் உள்ள ஆன்மிக தங்களுக்குச் சென்றுவந்த தக்ஷின் மற்றும் தாயார் சூடாரத்னாவும் பயணத்தின் போது தனியார் விடுதிகளில் தங்காமல் மரங்களுக்கு கிழே தங்கியுள்ளனர். அப்படியே பயணத்தை மேற்கொண்ட இருவரும் கேரளா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம் என சென்றனர். மேலும் பெங்களூருலிருந்து காஷ்மீர் வரையிலான பயணத்திற்கு மட்டும் காரை பயன்படுத்திக் கொண்டனர்.
சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் தக்ஷினும் அவரது தாயார் சூடாரத்னாவும் பயணித்துள்ளனர். இந்த பயணம் குறித்து தக்ஷின் கூறுகையில், “தங்களின் வாழ்வில் எது உண்மையான நோக்கம் என்பதனை இந்த பயணம் உணர்த்துவிட்டது. மனதில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சந்தோசமும் உற்சாகமும் பரவி கிடக்கின்றன” என்று கூறினார்.
மேலும் இந்தப் பயணத்தின்போது சக பயணி ஒருவர் இவர்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட இந்த பதிவு வைரலாக பரவியது. இந்த பதிவை பார்த்த மகேந்திரா கார் நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மகேந்திரா தாயுக்காக மகன் செய்த பாசத்தைக் கண்டு நெகிழ்ந்துள்ளதாகவும், அவர்களின் அடுத்த பயணத்திற்கு காரை பரிசாக்குவதாகவும் ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மகேந்திரா தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் பாராட்டுகளும் குவிந்துவருகின்றனர்.