இந்தியா

பாக்கெட் பாலில் பூச்சிக்கொல்லி மருந்து; 37.7% பால் தரமற்றவை - உணவு பாதுகாப்புத் துறை ஆய்வில் அதிர்ச்சி!

தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் விற்கப்படும் பால் பாக்கெட்டுகளில் அதிகளவில் கலப்படம் இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பாக்கெட் பாலில் பூச்சிக்கொல்லி மருந்து; 37.7% பால் தரமற்றவை - உணவு பாதுகாப்புத் துறை ஆய்வில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 37.7% பால் மாதிரிகள், நிர்ணயிக்கப்பட்ட தர விதிமுறைகளை பின்பற்றவில்லை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் வரை பால் பாக்கெட்டுகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டது FSSAI. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 1103 நகரங்களில் 6,432 தனியார் மற்றும் அரசு பால் நிறுவனங்களில் இருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

பாக்கெட் பாலில் பூச்சிக்கொல்லி மருந்து; 37.7% பால் தரமற்றவை - உணவு பாதுகாப்புத் துறை ஆய்வில் அதிர்ச்சி!

இந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் மருந்துகள், Aflatoxin M1 என்ற வேதிப்பொருள் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பாக டெல்லி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளில் அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories