இந்தியா

3 வயதிலிருந்தே பள்ளி... அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பாடத்திட்டம் : புதிய கல்விக் கொள்கையின்படி அறிமுகம்!

அரசு நடத்தும் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளுக்கும், தனியார் நடத்தும் மழலையர் பள்ளிகளுக்கும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

3 வயதிலிருந்தே பள்ளி... அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பாடத்திட்டம் : புதிய கல்விக் கொள்கையின்படி அறிமுகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதிய கல்விக் கொள்கையின் படி அங்கன்வாடி மற்றும் மழலையர் பள்ளிகளுக்கும் மத்திய அரசு பாடத் திட்டங்களைக் கொண்டுவருகிறது. இதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி குழுமம் வரைவு பாடத்திட்டத்தையும், மழலையர் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தயாரித்து மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ளது.

தற்போது, குழந்தைகளை 6 வயதில் முதல் வகுப்பில் சேர்ப்பது என்கிற நடைமுறை உள்ளது. அதனை மாற்றி பள்ளிக்கல்வியை 3 வயதிலிருந்தே தொடங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது அரசு நடத்தும் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளுக்கும், தனியார் நடத்தும் மழலையர் பள்ளிகளுக்கும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் பாடல்கள், எழுத்து, மொழிகளை புரிந்து கொள்ளுதல், விளையாட்டு, அன்றாட வாழ்க்கை பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கி பாடமாக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை என்னென்ன பாடங்களை, பயிற்சிகளை இந்த 3 முதல் 5 வரையிலான குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டபின்னர் அடுத்த ஆண்டு முதல் இந்தப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு, மத்திய அரசின் எல்லாத் திட்டங்களையும் பணிந்து ஏற்றுக்கொள்வதைப் போல இதையும் உடனடியாக அமல்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

banner

Related Stories

Related Stories