இந்தியா

அம்பானி வசமாகும் பாரத் பெட்ரோலியம்: 2016ம் ஆண்டே மோடி அரசு தீட்டிய மாஸ்டர் பிளான்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியார் மயமாக்குவதற்காக 2016ம் ஆண்டே பாஜக அரசு செய்த தில்லுமுல்லு தற்போது அம்பலமாகியுள்ளது.

அம்பானி வசமாகும் பாரத் பெட்ரோலியம்: 2016ம் ஆண்டே  மோடி அரசு தீட்டிய மாஸ்டர் பிளான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தனியாருக்கு விற்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனத்தை தனியாருக்கு விற்க நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை என்பதால் தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனத்தின் பட்டியலில் இருந்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை 2016ம் ஆண்டே மத்திய பாஜக அரசு சத்தமில்லாமல் நீக்கியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

பாரத் பெட்ரோலியத்தில் உள்ள 53% அரசு பங்குகளை சிக்கல் இல்லாமல் விற்கும் சூழலை பாஜக அரசு ஏற்கெனவே ஏற்படுத்திவிட்டது.

நாடு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு நிலையங்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்துக்கு உள்ளன. மொத்த உற்பத்தி திறன் 3 கோடியே 83 லட்சம் டன்கள் ஆகும்.

தனியாருக்கு விற்கும் ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கேற்பதாக கூறப்படுவதால், பாரத் பெட்ரோலியம் அம்பானி வசம் செல்வதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரயில்வே, விமானத் துறை என பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ள மோடி அரசு தற்போது பாரத் பெட்ரோலியத்தையும் தனியார் மயமாக்கும் திட்டத்தால் மக்கள் மேன்மேலும் கலக்கத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories