தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக்கொண்டு பளுதூக்கும் போட்டிகளில் முதல் முறை தங்கம் வென்றார். அதன் பின்பு கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்.
சதீஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் உள்ள சத்துவாச்சாரி என்ற அவரின் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவரது குடியிருப்புப் பகுதிகளில் கழிவு நீர் தேங்கி சுகாதாரம் இன்றி இருந்துள்ளது.
அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்துள்ளனர். இதனைப்பார்த்த சதிஷ், முதலில் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
பின்னர், பிதமர் மோடி கொண்டுவந்த 'தூய்மை இந்தியா திட்டம்' மூலம் கொண்டு வரபட்ட புகார் செயலிக்கு இந்த சுகாதார பாதிப்பை புகார் செய்திருந்தார். அதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்கள் அதிகமாக, அதிகமாக சுகாதார பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி டெங்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உணர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், தனது நண்பர்கள் உதவியுடன் சுத்தம் செய்ய முடிவு எடுத்தனர். பின்னர் அப்பகுதில், சுகாதார சீர்கேடுகளை சரி செய்தனர். இதுதொடர்பான அவர் பேசி வீடியோ ஒன்றையும் அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், “எங்கள் குடியிருப்பு பகுதியில், கழிவு நீர் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால் அப்பகுதி முழுவதும் சகதியும், சேறுமாய் உள்ளது. அதனை சீரமைத்து புதிய சாலை போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் தூய்மை இந்தியா திட்டத்துக்கான மொபைய் செயலியிலும் இதுகுறித்து புகார் அளித்திருந்தேன். முழுமையான பணிகள் எதுவும் நடைபெறாதப்போது, பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டதாக அதில் தெரிக்கப்படுகிறது. அதிகாரிகளின் நடவடிக்கை எடுக்காததன் விளைவு கொசுகள் இந்த பகுதியில் அதிகரித்துள்ளது.
பின்னர் அரசாங்கத்தை நம்பி எந்த பயனும் இல்லை என்பதனால் நண்பர்களுடன் சேர்ந்து நானே தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டேன். அரசாங்க ஊழியர்களை நம்பி பயனில்லை. நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து டெங்குவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள நாமே களமிறங்குவோம்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலக பரவி வருகிறது. பலரும் சதிஷின் விழிப்புணர்வு முயற்சிக்கு பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
“காமன்வெல்த் நாயனுக்கே தெரிகிறது. இந்த அரசாங்கத்தால் எந்த பயனும் இல்லை என்று. `சுவச் பாரத்’ என்னும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை இந்தியாவில் மோடி சிறப்பாக செய்ல்படுத்துக்கிறார் என அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் பில்கேட்ஸ் `குளோபல் கோல் கீப்பர்’ விருதை வழங்குகிறார். அவர் இந்தியாவிற்கு வந்த பார்வையிட்ட பின் சொல்லட்டும். குறிப்பாக டெங்குவை கட்டுப்படுத்த அரசாங்கம் சொல்வது மாபெரும் பொய் என்பதனை சதிஷ் சிவலிங்கம் நிரூப்பித்துள்ளார்” என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.