இந்தியா

16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய தனியார் முதலீடுகள் சரிவு - வெளியான அதிர்ச்சித் தகவல்!

16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய தனியார் முதலீடுகள் சரிவைச் சந்தித்துள்ளதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய தனியார் முதலீடுகள் சரிவு - வெளியான அதிர்ச்சித் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய தனியார் முதலீடுகள் சரிவைச் சந்தித்துள்ளதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது முதல் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய தனியார்துறை முதலீடுகள் குறைந்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் காலாண்டில் 95,300 கோடி முதலீடுகள் வந்துள்ளதாக தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்ததை விட 59 சதவீதம் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : Livemint.com
Courtesy : Livemint.com

உற்பத்தித் துறையில் தனியார் முதலீடு கடந்த ஆண்டை விட 64 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கிறது. சேவைத்துறையில் தனியார் முதலீடு கடந்த ஆண்டை விட 82 சதவீதம் வீழ்ச்சியடைந்து இருக்கிறது.

மேலும், புதிய தனியார்துறை முதலீடு கடந்த காலாண்டை ஒப்பிடும்போது 5 சதவீதமும், கடந்த ஆண்டு இதே காலண்டை விட 70 சதவீதமும் குறைந்துள்ளது. இந்த காலாண்டில் முடங்கியுள்ள திட்டங்களும் அதன் வீதமும் 1995க்குப் பின் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்டு இருக்கிறது.

1.9 டிரில்லியன் அளவில் நிதி பற்றாக்குறையால் திட்டபணிகள் முடங்கியுள்ளன. பொருளாதார மந்தநிலை தொடர்ந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அறிவிக்கப்பட்ட போதிலும் தனியார்துறை மீண்டு வர முடியாமல் தவித்து வருவது இந்த புள்ளி விவரங்கள் மூலம் தெளிவாகியுள்ளது.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories