உத்தர பிரதேசத்தின் ஷாஜகான் பூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை அடுத்து சின்மயானந்தா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சின்மயானந்தா அளித்த புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சின்மயானந்தா மீதான பாலியல் புகார் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தர பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி.
அதில், கடந்த ஆண்டு சின்மயானந்தாவுக்கு அரசு அதிகாரிகள் ஆரத்தி எடுத்த புகைப்படத்தை இணைத்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தும், சின்மயானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கின் கீழ் பதிவு செய்யாமல், அதற்கு கீழ் உள்ள பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
மேலும், முழு அரசு நிர்வாகமும் சின்மயானந்தாவை பாதுகாக்கும் போது காவல்துறை எப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.