இந்தியா

இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி?

தீபாவளிக்கு டெல்லியில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பசுமை பட்டாசுகள் தவிர வேறு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

2017ம் ஆண்டு டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதனை நீக்கக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது.

இன்னும் இறுதித் தீர்ப்பு வராததால் கடந்த ஆண்டு உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் தொடரும் என்று டெல்லி போலிஸார் கூறியுள்ளனர். அதன்படி இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முடியும் என்று அறிவித்துள்ளனர்.

சரவெடி போன்ற தொடர்ந்து வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்க முடியாது. 125 டெசிபலுக்கு குறைந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்கவேண்டும். மருத்துவமனை, வழிபாட்டு இடங்கள், கல்வி நிலையங்கள் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பசுமை பட்டாசுகளைத் தவிர பேரியம், லித்தியம்,மெர்க்குரி உள்ளிட்ட வேதிப்பொருள் கலந்த பட்டாசுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories