இந்தியா

வர்த்தக சரிவு: இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் ஃபோர்டு; மஹிந்திராவிடம் பங்குகளை விற்க முடிவு!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள வர்த்தக சர்வு காரணமாக மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

வர்த்தக சரிவு: இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் ஃபோர்டு; மஹிந்திராவிடம் பங்குகளை விற்க முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகின் கார் வர்த்தகத்தில் ஜம்பவனாக இருக்கும் நிறுவனம் அமெரிக்காவின் ஃபோர்டு. இந்தியாவில், தாராளமையத்திற்கு இந்திய சந்தை திறந்து விடப்பட்ட பின், 1995-ம் ஆண்டு கார் வர்த்தகத்தை தொடங்கியது அந்நிறுவனம்.

இந்தியாவில் சென்னை, குஜராத் மாநிலத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் உள்நாட்டு தேவை மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இப்படி நீண்டகாலம் கார் வரத்தகத்தில் இருந்து வருகிறது. ஆனாலும் அதன் வர்த்தகத்தில் எதிர்பார்த்தபடி பெரிய அளவிளான லாபத்தை ஈடுட்டமுடியாமல் போனது. அதற்கு கடந்த மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார சரிவும் மிக முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

இந்த பொருளாதார நெருக்கடியால் வர்த்தகத்தில் இருந்து விலகிக் கொள்ள ஃபோர்டு இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. சந்தையில் நேரடியாக போட்டியிடுவதற்கு பதிலாக, மஹிந்திரா நிறுவனத்துடன் ஒரு புதிய கூட்டு நிறுவமனாக தனது வர்த்தகத்தை இந்திய சந்தைகளில் தொடர முன்வந்துள்ளது. மேலும் அடுத்தவாரத்தில் இந்த புதிய நிறுவனம் குறித்த அறிவுப்புகள் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வர்த்தக சரிவு: இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் ஃபோர்டு; மஹிந்திராவிடம் பங்குகளை விற்க முடிவு!

அதன்படி, மஹிந்திரா போர்டு என்ற பெயரில் அந்த புதிய நிறுவனம் செயல்பட உள்ளதாகவும், அதில் ஃபோர்டு நிறுவனம் 49 சதவீத பங்குகளையும், மஹிந்திரா 51 சதவீத பங்குகளையும் பிரித்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டு நிறுவனத்தின் சில முக்கிய முடிவுகளை ஃபோர்டு கைவசம் வைத்திருக்கும் என்று தெரிகிறது.

அதுமட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள இரண்டு கார் ஆலைகள் உள்ளிட்ட ஃபோர்டு நிறுவனத்தின் சொத்துக்கள் மஹிந்திரா ஃபோர்டு கூட்டு நிறுவனம் வசம் பொதுவாக்கப்படுகிறது. எனினும், எஞ்சின் உற்பத்தி ஆலை போன்ற சில சொத்துக்களை தன் வசம் வைத்துக் கொள்ள ஃபோர்டு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேப் போல கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், கார் விற்பனை மற்றும் உற்பத்தியை முற்றிலுமாக கைவிட்டது. அதன் தொடர்ச்சியாக ஃபோர்டு நிறுவனமும் நேரடி வர்த்தகத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories