இந்தியா

“கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கிவிட்டு, பெட்ரோல் விலையை உயர்த்திய மோடி அரசு” - யெச்சூரி அம்பலம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கிவிட்டு, பெட்ரோல் விலையை உயர்த்திய மோடி அரசு” - யெச்சூரி அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்குப் பெற்ற பா.ஜ.க அரசு, பெட்ரோல் டீசலை அதிக விலைக்கு விற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து, ரூ.77.60 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 70.95 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

“கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கிவிட்டு, பெட்ரோல் விலையை உயர்த்திய மோடி அரசு” - யெச்சூரி அம்பலம்!

இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் பெட்ரோல் விலை 80 ரூபாயை எட்டிவிடும். அப்படியானால் சாமானிய மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாவார்கள். இதனால் அன்றாட பயன்பாட்டுக்கான பொருட்களின் விலையும் அதிகரிக்க நேரிடும்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், 2014ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சிபுரியும் மோடி அரசு, குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை வாங்கிவிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியையும், விலையையும் உயர்த்தி வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் வரியைக் குறைத்திருப்பதாகவும், இதற்காக 1.45 லட்சம் கோடி ரூபாயை பா.ஜ.க அரசு செலவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சாமானிய மக்களின் தலையில் வரியை ஏற்றிவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் குறைத்துள்ளதாகவும், சாதாரண மக்களுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் அரசின் வருவாயை உயர்த்திவிட முடியுமா என்றும் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories