இந்தியா

“இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள்” - பா.ஜ.க முதல்வர் சர்ச்சை பேச்சு!

இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் என திரிபுரா முதல்வர் பிப்லப்குமார் தேப் தெரிவித்துள்ளார்.

“இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள்” - பா.ஜ.க முதல்வர் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி” என்று அமித்ஷா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமித்ஷாவின் கருத்துக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் என திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், “இந்தியை தேசிய மொழியாக்குவதை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தேசத்தை நேசிக்காதவர்கள். நம் நாட்டில் அதிக மக்கள் பேசும் இந்தியை தேசிய மொழியாக்குவதற்கு ஆதரவளிக்கிறேன். ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் கூட முழுமையாக இந்தியாவை ஆட்சி செய்யவில்லை. ஆங்கில மொழியால் அலுவல் பயன்பாட்டிற்கு எவ்வித பலனும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories