இந்தியா

“எங்கே இருக்கிறார் ஃபரூக் அப்துல்லா?” - வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கெடு!

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“எங்கே இருக்கிறார் ஃபரூக் அப்துல்லா?” - வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கெடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஒரு மாதத்திற்கு மேலாகியும் அம்மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை.

அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்களும், அரசியல் கட்சிகளும் எவ்வித போராட்டத்திலும் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதால் மத்திய பா.ஜ.க அரசு, அங்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியும், அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தும் வைத்துள்ளது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை காணவில்லை என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சென்னையில் நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டுக்கு ஃபரூக் அப்துல்லாவை அழைக்க வேண்டும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவரை கண்டுபிடித்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

“எங்கே இருக்கிறார் ஃபரூக் அப்துல்லா?” - வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கெடு!

வைகோவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், அதனை பரிசீலனை செய்து ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பதை வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், காஷ்மீர் விவகாரத்தில் மக்களால் ஏன் அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுகமுடியவில்லை என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் அரசு மற்றும் காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories