இந்தியா

சின்மயானந்தா பாலியல் வழக்கு : ஆதாரமாக கொடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் கசிந்தது எப்படி?

சின்மயானந்துக்கு எதிராக சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கப்பட்ட விடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

சின்மயானந்தா பாலியல் வழக்கு : ஆதாரமாக கொடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் கசிந்தது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் உள்ள ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியின் தலைவர் சின்மயானந்த். இவர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

இவரது கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர், சின்மயானந்த் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி கடந்த மாதம் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வீடியோ வெளியான அடுத்த நாளே மாணவி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்த மனைவி ராஜஸ்தானில் மீட்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவியின் புகார் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி உத்தர பிரதேச காவல்துறை ஐ.ஜி நவீன் அரோரா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக்குழுவினர் புகாரளித்த மாணவி தங்கியிருந்த கல்லூரி விடுதி அறையில் சோதனை நடத்தி, அந்த அறைக்கு சீல் வைத்தனர். பின்னர் இந்த விவகாரம் குறித்து சின்மயானந்திடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரது ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அதன்பின்னர் அந்தப் பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒரு வருடத்திற்கு மேலாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான 43 வீடியோக்களை சிறப்பு விசாரணைக் குழுவிடம் பெண்ணின் தந்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பெண்ணின் தந்தை, “என் மகளை வீடியோ எடுத்து பின்னர் அதை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில், சின்மயானந்தாவின் செயல்பாடுகளை மறைமுக கேமரா வைத்துப் பதிவு செய்ய என் மகள் முடிவெடுத்தார்'' எனத் தெரிவித்தார்.

சின்மயானந்தா பாலியல் வழக்கு : ஆதாரமாக கொடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் கசிந்தது எப்படி?

புகார் அளித்த மாணவியின் தோழி கூறியபோது, “அவள் என்னுடன் தான் படித்துவந்தார். சின்மயானந்தாவால் அவள் சந்தித்த பிரச்னைகளை என்னிடம் கூறினாள். ஆரம்பத்தில் அவளுக்கு இலவசமாக உணவு மற்றும் சில சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால், பின்னர் என்ன நடக்கும் என அவள் அறிந்திருக்கவில்லை. பின்னர் தான் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டுவதாக என்னிடம் கூறினாள்'' எனத் தெரிவித்தார்.

சிறப்பு புலனாய்வுக்குழு இந்த வீடியோக்கள் மற்றும் தகவல்களை தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் வழங்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை கூறும்போது, “அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் எப்படி வெளியானது? இதில் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. இதுபற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பதுடன், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் விடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories