இந்தியா

மோட்டார் வாகன விதி மீறல் அபராதத்தைக் குறைக்க இயலாது - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பல்டி

புதிய அபராதம் விதிக்கும் முறை நாடெங்கும் செப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

மோட்டார் வாகன விதி மீறல் அபராதத்தைக் குறைக்க இயலாது - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பல்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து புதிய அபராத முறைகளை அமல்படுத்தியது.

இந்த புதிய அபராதம் விதிக்கும் முறை நாடெங்கும் செப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது.

பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பா.ஜ.க ஆளும் குஜராத், உத்த்கராகண்ட் மாநிலங்கள் அபராத தொகையைப் பாதியாகக் குறைத்தது. பல மாநிலங்கள் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தன.

இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளே கட்டணத்தை குறைத்து நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்து இருந்தார்.

ஆனால் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம். பேசிய அவர், மாநில அரசுகள் கட்டணக் குறைப்பு செய்வதை எதிர்ப்பதாகத் தெரிவித்தார். அனைத்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய சட்டத்தின் தேவை குறித்தும், அபராதம் விதிப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்படும் என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories