இந்தியா

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம்? - 2022க்குள் கட்டி முடிக்க மோடி அரசு திட்டம்!

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடத்தை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான வரைப்பட மாதிரிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை கோரியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம்? - 2022க்குள் கட்டி முடிக்க மோடி அரசு திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடுவும், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் நாடாளுமன்றத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடத்தை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இரு அவைத் தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், உலகளாவிய அளவில் நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்துக்கு மாதிரி வரைபட விண்ணப்பங்களை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை கோரியுள்ளது.

அதற்கான வரைபடங்களை செப்.,23ம் தேதிக்குள் கட்டட கலை நிறுவனங்கள் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டு சுதந்திர தினத்துக்குள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் அருகே உள்ள பிரதமர், உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 மத்திய அரசு அலுவலகங்களை ஒரே வளாகத்தில் கொண்டுவரும் வகையிலும், 2022ம் ஆண்டுக்குள் புதிய கட்டடத்தை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories