இந்தியா

“நல்ல சாலைகளால் தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன” - கர்நாடக துணை முதல்வரின் எக்குத்தப்பு பேச்சு!

சாலைகள் நன்றாக இருப்பதால்தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன எனப் பேசியுள்ளார் கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல்.

“நல்ல சாலைகளால் தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன” - கர்நாடக துணை முதல்வரின் எக்குத்தப்பு பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சித்ரதுர்க்காவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல், ''கர்நாடகாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் விபத்துகள் நடக்கின்றன. விபத்துகள் ஏற்பட மோசமான சாலைகள் தான் காரணமென செய்தி வருகிறது. ஆனால், நல்ல சாலைகளில் தான் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகின்றன.

நல்ல சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதால் தான் விபத்துகள் நிகழ்கினறன. மோசமான சாலைகளில் விபத்துகள் பெரும்பாலும் நடப்பதில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் விதிப்பதை எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், அபராத தொகையை குறைப்பது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். துணை முதல்வரின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories