இந்தியா

“தமிழ் தெரியாத அதிகாரிகளால் நிர்வாகச் சிக்கல்” : புதுச்சேரி முதல்வர் குமுறல்!

புதுச்சேரியில் தமிழ் தெரியாத இந்தி மட்டுமே தெரிந்த அதிகாரிகளால் நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என சட்டசபையில் கவலையுடன் தெரிவித்துள்ளார் புதுச்சேரி முதல்வர்.

“தமிழ் தெரியாத அதிகாரிகளால் நிர்வாகச் சிக்கல்” : புதுச்சேரி முதல்வர் குமுறல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று காலை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில் முதல்வர் நாராயணசாமி, 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதால் இத்திட்ட சாதக பாதங்களைப் பார்த்து சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தான் இதுதொடர்பாக முடிவு செய்யப்படும்.

புதிய வாகன திருத்த சட்டம் தொடர்பாக மக்களிடையே முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

பேரவையில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தமிழில் பேசும் சூழலில் அதை அதிகாரிகள் அறிந்து புரிந்துகொள்கிறார்களா என்று அரசு கொறடா அனந்தராமன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் உள்ள உயரதிகாரிகளாக தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வரும் நிலையில் அதிகளவில் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகளை மட்டுமே நியமித்து வருகிறது. இதனால் நிர்வாகச் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே தமிழ் தெரிந்த அதிகாரிகளை அதிகப்படியாக நியமிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்," என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories