இந்தியா

காவல் நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி குற்றவாளியை விடுவித்துச் சென்ற கும்பல்!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பெஹ்ரர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி சிறையில் இருந்த கைதியை அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு  நடத்தி குற்றவாளியை விடுவித்துச் சென்ற கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

விக்ரம் குஜ்ஜார் என்பவர் மீது ஹரியானா காவல்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. விக்ரம் தன் கூட்டாளிகளுடன் கொலை, கொள்ளை எனப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தக் கும்பல் ஹரியானா போலிஸுக்குத் தண்ணிகாட்டி வந்துள்ளது. இதையடுத்து, விக்ரம் குஜ்ஜார் பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழன் இரவு ராஜஸ்தான் காவல்துறையினரிடம் விக்ரம் குஜ்ஜார் பிடிபட்டார். ஆல்வார் பகுதிக்குட்பட்ட பெஹ்ரர் காவல் நிலையத்தில் அவர் சிறை வைக்கப்பட்டார். இதுகுறித்து ஹரியானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், விக்ரம் கைதான தகவல் அவரது கூட்டாளிகளுக்குத் தெரியவந்தது.

விக்ரம் குஜ்ஜார்
விக்ரம் குஜ்ஜார்

வெள்ளிக்கிழமையன்று அதிகாலை நேரத்தில் காவல்நிலையத்துக்கு முன்பு சில கார்கள் வந்து நின்றன. திடீரென காரில் இருந்து இறங்கிய கும்பல், காவல் நிலையம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. போலிஸார் சுதாரிப்பதற்குள் சிறையில் இருந்த விக்ரம் குஜ்ஜாரை அந்தக் கும்பல் மீட்டுச்சென்றது.

அந்த கும்பல் பயன்படுத்தியது ஏ.கே-47 ரக துப்பாகிகளாக இருக்கலாம் என போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கும்பலை பிடிப்பதற்கு ஆல்வார் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories