இந்தியா

நிலவில் தரையிறங்கும் போது லேண்டரின் சிக்னலில் சிக்கல்: இஸ்ரோ அறிவிப்பு!

நிலவில் தரையிறங்கும் போது விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவில் தரையிறங்கும் போது லேண்டரின் சிக்னலில் சிக்கல்: இஸ்ரோ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் தென் துருவத்தை ஆய்வு சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், கடந்த மாதம் 20ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது.

அதன் பிறகு, 5 முறை சந்திரயானின் சுற்று வட்டப்பாதை மாற்றியமைக்கப்பட்டது. இதனையடுத்து, செப்.,2ம் தேதி சந்திரயான் விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் நிலவின் மேற்பரப்பை நோக்க பயணிக்கத் தொடங்கியது.

சந்திரயான் 2 விண்கலத்திட்டத்தின் சவாலான நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து லேண்டரின் பணிகளை விஞ்ஞானிகள் கண்காணித்தனர்.

நிலவில் தரையிறங்கும் போது லேண்டரின் சிக்னலில் சிக்கல்: இஸ்ரோ அறிவிப்பு!

பிரதமர் மோடியும், இஸ்ரோ மையத்துக்கு வந்து லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை பார்வையிட்டார். இன்று அதிகாலை 1.38 மணிக்கு நிலவை நெருங்கி வந்த லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது. இதுவரை நடந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்ததால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதன் பிறகு, நிலவில் இருந்து 2.1 கிமீ தொலைவில் லேண்டர் இருந்தபோது, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது, நிலவில் தரையிறங்குவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தாலும் ஆர்பிட்டர் தொடந்து ஓராண்டுக்கு நிலவை சுற்றி வரும் என விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

ஆர்பிட்டரில் இருந்து கிடைக்கும் புகைப்படங்களின் உதவியுடன் நிலவில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தாலும் சந்திரயான் 2 திட்டம் 95% வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories